எடப்பாடியுடன் இணையும் சசிகலா சகோதரர்... அ.தி.மு.க-வை கைப்பற்ற திட்டம்..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Aug, 2018 04:18 am
edappadi-palanisamy-teaming-up-for-admk-without-masters

அ.தி.மு.கவுடன் இணைய உள்ளதாக அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளார் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். 
அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் சசிகலா தம்பி திவாகரன் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடி அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த திவாகரன்  அவரது நடவடிக்கைகளால் சசிகலாவின் வெறுப்பிற்கு ஆளானார். அ.தி.க-வை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அக்கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் கோவிந்தராஜன், ‘’தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 17 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மதுரை, திருச்சி, மன்னார்குடியில் கட்சியின் கொள்கை விளக்க மாநாடு நடக்க உள்ளது. டி.டி.வி.தினகரன் இரட்டை இலையை ஒழிக்க முயற்சிக்கிறார்.

இரட்டை இலைக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகம் செயல்படாது. அதிமுகவுடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கும் எனத் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-வையும், ஆட்சியையும் பறித்துக்கொண்டு துரோகம் செய்ததாக சசிகலாவும், தினகரனும் எடப்பாடி அணியை வசைபாடி வரும் நிலையில், அவர்களுடன் திவாகரன் அணி இணைய இருப்பதாக கூறப்படுவது மேலும் சசிகலா வட்டாரத்தை வெறுப்பிற்கு உள்ளாக்கும். 

ஏற்கெனவே டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட ஈகோ மோதலால்தான் அவருக்கு எதிராக கட்சி தொடங்கினார் திவாகரன். தனது அக்காள் மகனான தினகரனை சகித்துக் கொள்ளாத திவாரகனால் எடப்பாடி அணியை சகித்துக் கொள்ள இயலுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அங்கு ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் இடையிலான விவகாரமே விஸ்வரூபம் எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், திவாகரனுக்கு மதிப்பு இருக்குமா? சசிகலா குடும்ப உறவு என்பதால் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகளுக்கு நெருடல் ஏற்படாதா? என இதுபோன்ற பல கேள்விகள் எழும். அதே வேளை அவர்களுடன் உறவாடி மெல்ல அ.தி.மு.க.,வை தன் வசப்படுத்தும் நோக்கத்தில் திவாகரன் தனது கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

திவாகரன் கட்சியை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொள்ள ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் இருவரும் ஒப்புக்கொள்வார்களா? என்பதே தற்போதைய கேள்வி!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close