ஏன் தெரியுமா? வடக்கே தலை வைத்து படுக்க கூடாதா?

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 08:55 am
do-you-know-why-do-not-keep-your-head-to-the-north-while-sleep

பெரியவர்கள் எதை சொன்னாலும் மறுப்பேச்சு இல்லாமல் கேட்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். ஆனால் இன்றுள்ள இன்டெர்னெட் உலகத்தில் நமது பிள்ளைகளுக்கு எதையும் அறிவியல் பின்புலத்துடன் ஒப்பிட்டு கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மட்டும் இல்லை, நாம் அனைவருமே ஒரு விஷயத்தை காரண காரியத்தோடு தெரிந்துக் கொள்ளும் போது, அது மனதில் ஆழப் பதியும்.வடக்கே தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் கண்டிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது ஏன் என்று தெரியுமா?. முன்பு ஒரு முறை பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில், சிவனுடன் போர் புரிந்த போது, போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். தனது செல்லப் பிள்ளைக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி தனது பூத கணங்களுக்கு கட்டளையிட்டாராம். அவர்களும்  வடக்கே தலை வைத்து படுத்திருந்த யானையின் தலையைக் காண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். 

இது நம் வீட்டுப் பெரியவர்கள் நமக்கு சொல்லித் தந்தது. நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம் என்பதால், வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால், குழம்பிய மனநிலை உருவாகும் என்பதுடன்,ஆழ்ந்த தூக்கம் வராது. தூக்கம் கெட்டால் உடல்நலமும் பாதிக்கும். இதைத் தவிர்க்கவே வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று ஆன்மீகத்துடன் அறிவியலையும் செர்த்து சொல்ல வேண்டும். இதனால் நல்ல பல கருத்துக்கள் பிள்ளைகளின் மனதில் ஆணி அடித்தார் போல் நிற்கும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close