பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம்: தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 02:17 pm
tamilnadu-government-petition-regarding-cracker-bursting

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. 

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, 'நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை' என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதே நேரத்தில், நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளனர். அதாவது,  'குறைவான புகையை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்' உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இத்துடன் முக்கியமாக, தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தன்று இரவு 11.55  மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து இந்த உத்தரவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுவில்; “இந்த ஆண்டுக்கான பட்டாசுகளை ஏற்கனவே தயாரித்து முடித்தாகி விட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாட்டினால் நிறைய பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை இந்த ஆண்டுக்கு விலக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இத்தீர்ப்பில் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் எதுவும் கூறப்படவில்லை. எனவே பசுமை பட்டாசு என்பதற் கான விளக்கம் தேவைப்படுகிறது” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவும் தமிழக அரசின் மனுவுடன் சேர்த்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close