தீபாவளியை முன்னிட்டு சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் குவியும் பொதுமக்கள்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:25 pm
traffic-in-t-nagar

தீபாவளிக்கு இன்னம் 2 நாட்களே மீதம் உள்ள நிலையில் சென்னை தீ.நகர் உஸ்மான் சாலையில் ஆடைகள், பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளனர்.  

தீபாவளி பண்டிகைக்காக தி.நகர் மட்டுமின்றி புரசைவாக்கம் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட இன்று ஆடைகள், பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரும் 5 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதலே பொதுமக்கள் ஆடைகள் மற்றும் இனிப்புகள் வங்க தீ.நகரில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தீ.நகர் பகுதி முழுவதும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. 

கூட்டத்தை கட்டுப்படுத்த ரெங்கநாதன் நகர் உஸ்மான் சாலையில் 1200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காவலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  நகரின் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் சாலையோரங்களில் மேல்க்கூறை அமைத்து பைனாக்கிலர் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். 

திநகரில் மட்டும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும் கேமராக்கள், 3 சிரிய காவல் கட்டுபாட்டு அறை மற்றும் 5 காவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்களின் உடமைகள், குறிப்பாக குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் வசதிகள் ஏற்ப்படும் செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் திநகர், ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திநகர் பகுதி மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள முக்கிய வணிக பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close