பாஜக ஆட்சி கார்ப்பரேட்க்கான ஆட்சி அல்ல! சர்காரை விளாசிய தமிழிசை

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Nov, 2018 03:17 pm
tamilisai-press-meet

பாஜக ஆட்சி கார்ப்பரேட்க்கான ஆட்சி அல்ல, காமன்மேன்க்கான ஆட்சி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “பல பேர் முதலமைச்சர் கனவுகளோடு திரையில் நடிக்கிறார்கள். அவர்கள் திரையில்தான் ஆட்சி செய்ய முடியும்.கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஒட்டு பற்றி படம் எடுக்கிறார்கள். ராகுல் காந்தியின் பேச்சை எதிர் காட்சிகள் தான் விமர்சனம் செய்தார்கள். அதனால் இப்போது காங்கிரஸ் கட்சியே விமர்சனம் செய்கிறார்கள். ராகுல் பிரதமர் என்று அறிவித்தால் இப்பொது இருக்கும் சூழலில் 40 சீட்டு கூட பெறாது. தமிழகத்தில் உள்ள தமிழர்கள், இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பது மோடி ஆட்சியில் தான். உண்மையான ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஆட்சி பாஜக தான். எத்தனை ஸ்டாலின், எத்தனை லாலு பிரசாத், யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது. மதசார்பற்ற கூட்டணி யார் வைக்க வேண்டும் என்று கூறினாலும் அவர்கள் எங்களுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். நாங்கள் தான் மதசார்பற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம். சிறுபான்மை மக்கள் பாஜகவுடன் தான் இருக்கிறார்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

பாரதீய ஜனதா கட்சியின் நிதிக்காக வெளிப்படையான நிதி பங்களிப்பு நமோ ஆப் மூலம் செலுத்தி வருகிறார்கள். சாமானியார்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. இது கார்பரேட்க்கான ஆட்சி, இல்லை காமன் மேன்க்கான ஆட்சி. விஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும். பட்டாசு தீர்ப்பில் மிக அதிமான கட்டுபாடு போடப்பட்டு இருக்கிறார்கள். கடுமையான கட்டுபாடு கொண்டு இருப்பது எற்ப்புடையாது அல்ல, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், குழந்தைகளை கைது செய்தது தவறு. பட்டாசு தீர்ப்பு குறித்து பாஜக சட்ட ரீதியாக அணுகும்” என்று கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close