குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 08:55 am
group2-exam

தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 2 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்துத் தொகுதி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் 11இல் நடைபெறவுள்ள குரூப் 2 பணிகளுக்கான முதனிலைத்தேர்வுக்கு, வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நவம்பர் 11 அன்று திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close