குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விலையில்லா டி.வி.டி-கள்

  சுஜாதா   | Last Modified : 08 Nov, 2018 08:36 am
cfsi-to-give-free-dvds-on-the-occasion-of-children-s-day

குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட நிறுவனம் (சி.எப்.எஸ்.ஐ), குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட விலையில்லா டி.வி.டி-களை வழங்குகிறது. டி.வி.டி-களை பெற விருப்பமுள்ள பள்ளிகள்,  24981159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட நிறுவனம், குழந்தைகளுக்கான பிரத்தியேக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி இளம் மனங்களில், அற உணர்வை வளர்ப்பதற்கும் உதவுகின்றன என்று சென்னையின் சி.எப்.எஸ்.ஐ-ன் உதவி விநியோக அலுவலர், திருமிகு. அகிலா பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close