ஜெயலலிதா  பெயர் கோமளவள்ளி என்று யார் சொன்னது?- டிடிவி தினகரன் பாய்ச்சல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 05:24 pm
ttv-dhinakaran-press-meet

ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி என யார் சொன்னது என  அ.ம.மு.க. துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.

. ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், "ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள்" என்று கேட்டார். "நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படி சொல்கிறார்கள்" என்று என்னிடம் கேட்டார். அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close