மோசமான வானிலையால் புயல் பாதிப்பு இடங்களுக்கு முதல்வர் பயணம் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 12:44 pm
shief-minister-visit-to-gaja-affected-area-cancelled-in-mid

புயல் பாதித்த இடங்களுக்கு முதல்வர் பயணம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆய்வு செய்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றனர். 

புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்வர் செல்ல இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பினார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவரது பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close