செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுபவர்கள் பட்டியல்: மோடி முதலிடம்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 09:18 am
pm-narendra-modi-retains-india-s-top-newsmaker-tag-on-yahoo-2018-year-in-review

இந்த ஆண்டில் அதிகமாக செய்திகளில் இடம் பிடித்தோர் பட்டியலை யாஹு தனியார் நிறுவனம் இயர் இன் ரிவியூவ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து சில ஆண்டுகளாக  முதலிடத்தில் இருந்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். முத்தலாக் தீர்ப்பு வழங்கிய, உச்ச நீதிமன்ற தலைமை முன்னாள் நீதிபதியான தீபக் மிஸ்ரா மூன்றாவது இடத்தில் உள்ளனர். 

வெளிநாட்டுக்கு தப்பிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி அதற்கடுத்த இடங்களில் உள்ளனர். பாலியல் பலாத்கார புகாரில் சிக்கி பதவியை இழந்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர், எம்.ஜே. அக்பர், 6வது இடத்தில் உள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகர்கள் தீபிகா மற்றும் ரன்வீர் செய்திகளை கலக்கும் ஜோடியாக திகழ்ந்துள்ளனர். மேலும் கரினா மற்றும் சைஃப் அலி கானின்  மகன் தய்மூர் அலிகானும் இந்த பட்டியிலில் இடம் பிடித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close