சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் ரோஹிணி ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 05:13 pm

salem-collector-rohini-inspection

சேலம் மாவட்டத்தில்  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அம்மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இன்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார். 

சேலம் மாவட்டம் நாட்டாண்மை கழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு கூட்டரங்கில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள தேர்தல் பொருட்களை அவர் பார்வையிட்டார். 

மேலும், அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, பெத்தநாயக்கன்பாளையம் அரசு பழங்குடியினர் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்  விவசாய நிலத்தில் முட்டைக்கோஸ் பயரிடப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close