ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு இழப்பு: நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 09:46 am
m-k-stalin-paid-last-respect-to-nel-jayaraman

தேனாம்பேட்டையில் மறைந்த நெல் ஜெயராமன் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர் ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பேரிழப்பு என்று கூறினார். 

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு காலமானார். அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திராவிட முன்னேற்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் ஜெயராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் பேசிய அவர், "மண் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்து நெல் விவசாயிகளுக்கு புத்துணர்ச்சியை தர அரும்பாடுபட்டவர். நெல் திருவிழாக்கள் நடத்தி இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். அவரது மறைவு ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அழ்ந்த இரங்கல்கள்" என்றார். 

மேலும் வைகோ, தமிழிசை உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close