சர்கார் படத்திற்காக மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 08:24 am
vijay-fans-arrested

சர்கார் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர்களை மிரட்டும் வகையில் தங்களை விஜய் ரசிகர்கள் என்றுக் கூறிக்கொண்டு தகாத வார்த்தைகளில் பேசி வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதற்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, அதிமுகவினருக்கும் , அரசுக்கும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் இலவச பொருட்களை தூக்கி எறிவது போல் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.

இதில், இருவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சையை ஏற்படுத்தியது. அரிவாளை கையில் வைத்துக் கொண்டு சுழற்றியபடி மிரட்டும் தொனியில் மோசமான வார்த்தைகளில் அமைச்சர்களை மிரட்டும் தொனியில் பேசினர்.  இது தொடர்பான புகாரில் விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய் என்பதும், வீடியோவை வெளியிட்டவர் அனிஷேக் என்பதும் தெரியவந்தது. இதில், சஞ்சய் மற்றும் அனிஷேக் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close