வேகமாக வளரும் நகரங்கள் பட்டியல்: 6வது இடத்தில் திருப்பூர்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 09:32 am
tirupur-gets-6th-place-in-fastest-growing-cities-in-the-world-list

உலகிலேயே அதிகம் வளர்ச்சி பெறும் நகரங்களின் பட்டியலில், முதல் 20 இடங்களில் திருப்பூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட 17 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

ஆக்ஸ்ஃபோர்ட் பொருளியல் துறை சார்பில் ஆண்டுதோறும் உலகளாவிய நகரங்களின் ஆய்வுப் பட்டியல் தயாரித்து வெளியிடும். அதன்படி 2018 முதல் 2035ம் ஆண்டு வரை அதிக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முதல் 20 நகரப் பட்டியலில் இந்திய நகரங்களே 17 இடங்களை நிரப்பியுள்ளன.

சூரத், ஆக்ரா, பெங்களூரு, ஐதராபாத், நாக்பூர் உள்ளிட்ட இடங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. உலகளாவிய பட்டியலில் 6வது இடத்தில் திருப்பூர் சராசரி ஆண்டு ஜி.டி.பி. 8.36% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

8வது இடத்தில் திருச்சி 8.29% ஜி.டி.பி. உடனும், சென்னை 8.17% ஜி.டி.பி. யும் பொருளாதார வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close