கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு?- தமிழிசை கேள்வி

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 12:15 pm

tamilisai-tweet-about-spiritual-event-in-temple

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமையில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதற்கு எதிராக பலரும் பேசி வருவது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். 

வாழும் கலை அமைப்பு சார்பில் தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த மனு இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஏற்கனவே டெல்லியில் யமுனை கரையில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியவர். யமுனையின் சுற்றுச்சூழலை கெடுத்ததாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது அப்போது புகார் கூறப்பட்டது. சுற்றுச்சூழலை கெடுத்ததற்காக பசுமை தீர்ப்பாயம் ரவிசங்கருக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது.

தஞ்சை பெரியகோயில் தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது. ஆன்மீகத்தலமாகவும் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும், பிற மாநிலத்தவர்களும் வியந்து காண வரும் சுற்றுலாத்தலமாகவும் தஞ்சை பெரிய கோயில் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பெரிய கோயிலில் ரவிசங்கர் தியான நிகழ்ச்சி நடத்துவதால் தஞ்சாவூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை கோயிலின் ஆயிரம் ஆண்டு அடையாளங்கள் அழியும் ஆபத்து உள்ளது என புகார் கூறியுள்ளனர். சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெரிய கோயில் தமிழ்நாட்டின் கட்டிட கலைக்கு மிக முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது.

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் தியான நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் தஞ்சை பெரிய கோவில் உள்ளது. எனவே  தியான நிகழ்ச்சி நடத்துவதற்கு இந்திய தொல்லியல் துறையின் அனுமதியையும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர உள்ளது.

 

 

இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "கோவில் வளாகத்தில் உரிய அனுமதியுடன் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு?இதை கடவுள் மறுப்பாளர்கள் கூறுவது ஏன்?இதே போலி மதசார்பாளர்கள்தான் தாமிரபரணி புஷ்கரத்தை எதிர்த்தார்கள்.காங்.உடன் கூட்டணி சேர காத்திருக்கும் திருமா ராகுல் காந்தியின் தேர்தல் நேர ஆன்மீக யாத்திரையை கண்டிப்பாரா?" என கேள்வி எழுப்பி உள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.