பாரம்பரியத்துடன் இந்தப் பொங்கலையும் சுவைத்துப் பாருங்க! அப்புறமா விடவே மாட்டீங்க!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 05:58 pm
pongal-resipe-pongal-for-the-taste-with-tradition

பொங்கலுக்கு எப்போதும் பாரம்பரிய முறைப்படி, வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் செய்வது தான் நம்முடைய வழக்கம் . இந்த பொங்கலுக்கு கூடுதலாக  கல்கண்டு பொங்கலை செய்துப் பார்ப்போமா?.  

தேவையான பொருட்கள் :

கல்கண்டு :400 கிராம்

பால் : 1 லிட்டர்

திராட்சை : 100 கிராம்

நெய் : 200 கிராம்

முந்திரி : 100 கிராம்

பச்சரிசி : 500 கிராம்

ஏலக்காய் : சிறிதளவு தூள்

செய்முறை: 

கல்கண்டை நன்றாக பொடித்து கொள்ளவும்.பின்னர் பச்சரிசியை நன்றாக கழுவி அதை அரை மணி நேரம் ஊற வைத்து,மிக்ஸியில் ரவையை போல உடைத்து கொள்ளவும்.ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். காய்ச்சிய பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் ஏற்கனவே உடைத்து வைத்திருந்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேக வைக்க வேண்டும்.இடையிடையே தேவையான நெய்யை சேர்க்கவும்.

பிறகு பொடித்த கல்கண்டை சேர்த்தவுடன் கல்கண்டு கரைந்ததும் நெய்யால் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யை ஊற்றி நன்கு கலந்து விட்டு  இறக்கவும். மிகவும் சுவையான கல்கண்டு பொங்கல் ரெடி. பொங்கல் பண்டிகைக்கு மட்டுமின்றி நம் விருப்பம் போல் சுலபமாக செய்து சாப்பிடலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close