வேடன் வடிவில் பெருமாளை பார்த்ததுண்டா...?

  இளங்கோ   | Last Modified : 11 Jan, 2019 10:11 pm
varadharaja-perumal-kovil-special-story

காஞ்சிபுரம் என்றாலே கோவில் உள்ள தளங்கள் தான் நம் அனைவருக்கும் ஞாபகம் வரும். காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் வேடன் வடிவில் பெருமாளை பார்த்ததுண்டா...? 

காஞ்சி மாவட்டம் செவிலிமேட்டு கிராமத்தில் வேடன் வடிவில் வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள், பெருமாள் போன்று வேடம் அணிந்து ஆடி பாடி நடனம் ஆடும் காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேட்டிலிருந்து ஓரிக்கை செல்லும் சாலையில், ராமானுஜருக்கு தனி கோவில் அமைந்துள்ளது.  சித்தாந்தத்தை கற்றுக்கொள்ள, யாகவ பிரகாசரிடம் சென்ற ராமானுஜர்  அவ்வப்போது சீற்றம் கொண்ட யாகவ பிரகாசருக்கு பொறாமை ஏற்பட்டு  தனது கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை கூறும், ராமானுஜரை கொலை செய்ய  முடிவு செய்தார். அனைவருடனும் காசி யாத்திரை சென்ற  ராமானுஜர் தப்பி  செவிலிமேடு கிராமத்தை அடைந்தாகவும் அங்கிருந்த வேடனிடம் உதவி  கேட்டு  இரவு தங்கிய ராமானுஜர்  காலையில் எழுந்து  அனுஷ்டானம் செய்ய தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்.  

வேடன் காட்டிய கிணற்றில் மூழ்கி எழுந்த ராமனுஜரின் முன்பிருந்த வேடன்  மாயமாகியதால் இரவு வரதராஜ பெருமாள், வேடன் வடிவில் வந்து தனக்கு உதவியதை கண்டு  ஆச்சரியமானார். பூஜை செய்ய வரதராஜ பெருமாளை மானசீகமாக வேண்டிய போது அனுஷ்டான குளம் தோன்றியுள்ளது  என கூறுகின்றனர்.

ராமானுஜருக்கு வரதராஜ பெருமாள் காட்சி அளித்த இடத்தில் ராமானுஜருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளில் இருந்து, 12வது நாளில், இங்கு அனுஷ்டான உற்சவம் நடைபெறுகிறது.  இங்கு பக்தர்கள் பெருமாள் போன்று வேடம் அணிந்து பாடல்கள் பாடிய படி நடனம் ஆடுகின்றனர்.

அதனையொட்டி  கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள், வேடன் அலங்காரத்தில் ராமானுஜரின் கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு அபிஷேகங்களை ஏற்றுக்கொள்வார். பின்னர் மாலை நேரத்தில் கோவிலுக்கு திரும்புவார். இந்த உற்சவம்  ராமானுஜர் கோவில் அருகே வெகு விமரிசையாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் பெருமாளை பக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close