தெஹல்கா ஆவணப்படம்; குற்றப்பிரிவு போலீசார் வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 12:39 am
admk-sues-tehelka-documentary

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு கொலை, கொள்ளையில் தொடர்பு இருப்பதாக, தெகல்கா நிறுவன முன்னாள் தலைவர் மாத்தியூ சாமுவேல் ஆவணப்படம் எடுத்த நிலையில், அவர் மீது அதிமுக அவதூறு வழக்கு தொடுத்துள்ளது .

தெகல்கா செய்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மாத்தியூ சாமுவேல், கொடநாடு எஸ்டேட் மர்மங்கள் தொடர்பாக ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட் கொள்ளையடிக்கப்பட்டது, காவலாளி கொலை செய்யப்பட்டது, அது தொடர்பான குற்றவாளிகள் விபத்தில் இறந்தது என அனைத்தின் பின்புலத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சசிகலாவும் இருப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து எதிர்கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக கட்சியின் சார்பாக மாத்தியூ மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஐடி பிரிவை சேர்ந்த ராஜன் சத்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் சாமுவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close