அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்: தமிழக முதல்வர் பொங்கல் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 07:52 am
eps-wishes-for-pongal

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளை, மக்கள் இன்புற்று கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரூபாயும் வழங்கி சிறப்பித்துள்ளது.

 

 

விவசாய பெருங்குடி மக்களின் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு, பல்வேறு முன்னோடி திட்டங்களை விவசாய பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது. தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தியுள்ள முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close