மகாத்மா காந்தியின் முக்கிய பொன்மொழிகள்!

  சாரா   | Last Modified : 30 Jan, 2020 12:43 pm
mahatma-gandhi-s-death-anniversary-gandhi-s-inspiring-quotes

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் நமது வாழ்க்கைக்கு உதவும் காந்தியடிகளின் பொன்மொழிகளை படித்து பின்பற்றுவோம். 

காந்தியடிகளின் முக்கிய பொன்மொழிகள்: 

►  எல்லாவற்றுக்கும் அடிப்படை அறம் தான். அந்த அறத்திற்கே அடிப்படை உண்மை தான்.

►  நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமில்லை; நீ 'செய்கிறாய்' என்பது தான் முக்கியம்.

►  பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அது போல முதலில் நீ மாறு.

►  பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம்.

►  அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் எந்த தொடர்பும் கிடையாது. 

►  எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே தான் வாழ்வு இருக்கிறது.

►  இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார். 

►  விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள். தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல

►  மயக்கம் வரும்போது அறிவு பயன்படாது. அந்த இடத்தில் நம்பிக்கை தான் கைகொடுக்கும். 

►  கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல; தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.

►  எல்லா கலைகளையும் விட வாழ்வு தான் பெரிது. 

►  பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாக இருக்க மறந்துவிடுங்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close