சின்னத்தம்பியும்.. வனத்துறையினரும்...

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 09:04 am
chinna-thambi-and-forest-department

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் சுற்றும் காட்டு யானை சின்ன தம்பியை பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.  

கோவை சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டு யானை "சின்னத்தம்பி" அனைவருக்கு ஹீரோவாக மாறிவிட்டான். விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தவிர சின்னதம்பியின் மீது எந்த புகாரும் இல்லை. சின்னத்தம்பி மிகவும் நல்லவன் என்றும் அவனை கோபப்படுத்தாமல் இருந்தால் அவன் யாரையும் தொந்தரவு செய்யமாட்டான் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இதனிடையே, விவசாயிகள் அளித்த புகாரை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி சின்னதம்பியை வனத்துறையினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சின்னத்தம்பியின் தந்தம் உடைந்தது. ஒருவழியாக மயக்க மருந்து செலுத்தியும், கும்கி யானை உதவியுடனும் பிடித்து ஆனைமலை டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு விட்டனர். சின்னத்தம்பியின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது. 

இந்நிலையில், கடந்த 28ம் தேதி மீண்டும் பொள்ளாச்சி பகுதியில் நுழைந்த சின்னதம்பியை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர். ஆனால், தற்போது வரை சின்னதம்பி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறான். உடுமலை வனப்பகுதியில் சுற்றிதிரியும் சின்னத்தம்பியை பிடிக்க கலீம், மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். ஆனால் சமூக ஆர்வலர்கள் பலர், கும்கி யானையாக மாற்ற வேண்டாம் என கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்நிலையில் கும்கி யானையாக மாற்றுவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close