சரவணா ஸ்டோர்ஸ் உட்பட 4 நிறுவனங்களில் ஐடி ரெய்டு: ரூ.433 கோடி வரை வரி ஏய்ப்பு

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:12 pm
it-seizes-gold-and-diamond-from-saravana-stores-lotus-and-g-s-square

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சரவணை ஸ்டோர்ஸ் மற்றும் 3 நிறுவனங்களில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஜனவரி மாதம் 29ம் தேதி பிரபல ஜவுளி நிறுவனங்களான தி.நகர், பாடியில் உள்ள லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ்.ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 74 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. கடந்த 6 தினங்களாக இந்த சோதனை நடந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது. 

இந்நிலையில் இன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஜனவரி 29ம் தேதி முதல் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. இதில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 4 நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close