2019 பட்ஜெட் ஏழை மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 04:12 pm
tn-jeyakumar-press-meet-and-talks-about-budget

நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம். திமுக, அமமுக தவிர எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். 

தேர்தலில் எங்களுக்கு போட்டி திமுக தான். இரண்டாவது தினகரனின் அமமுகவை ஒரு லெட்டர் பேடு  கட்சியாகத் தான் கருதுகிறோம். திறந்த மனதுடன் உள்ள கட்சி தான் அதிமுக. 

பாஜக உடன் நிர்பந்திக்கப்பட்ட கூட்டணி அல்ல. கண்டிப்பாக அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் " என்றார்.

தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு, 'நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என பதிலளித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close