சென்னையில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
பின்பனிக்காலம் என்பதால், கடந்த சில நாள்களாக சென்னையில் அதிகாலை வேளையில் கடும் குளிரும், பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவும் காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் சைதாப்பேட்டை, வடபழநி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
சட்டென்று மாறிய வானிலை காரணமாக, புயல் சின்னம் ஏதாவது உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புயல் சின்னம் எதுவும் உருவாகவில்லையென்றும், சென்னை மாநகரில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
newstm.in