தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி 

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 10:01 am
pulwana-terror-attack-actor-rajini-condemned

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
புல்வாமாவில் நடத்தப்பட்டுள்ள மன்னிக்க முடியாத தீவிரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

போதும்...இதுவரை நடந்தவை போதும்... காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது.

வீரமரணம் அடைந்து இந்த உலகைவிட்டு பிரிந்த நம் வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close