சுகாதாரத்தை மேம்படுத்த சுற்றுச் சுவரில் ஓவியம் வரைந்த மாணவர்கள்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:40 am
students-painting-on-the-wall

கும்பகோணம் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள சுவர்கள் அருகே பொதுமக்கள் அசுத்தம் செய்து வருவதைத் தடுக்க மாணவர்கள் தீட்டிய ஓவியம் அனைவரையும் ஈர்த்துள்ளது. 

கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள சுவர்கள் அருகில் பொதுமக்கள் அசுத்தம் செய்து வந்ததால், அப்பகுதியில் சுகாதார சீர் கேடு நிலவி வந்தது. இதனை தடுத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கும்பகோணம் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி கட்டிடக் கலைத் துறையைச் சேர்ந்த  மாணவர்கள் அப்பகுதியை சுத்தம் செய்தனர். 

மேற்கொண்டு அசுத்தம் செய்வதைத் தடுக்கும் வகையில் மாணவர்கள் அவர்களின் கைவண்ணத்தை சுவரில் ஓவியமாகத் தீட்டினர்.

விவேகானந்தர், புத்தர் மற்றும் அனைத்து மத தெய்வங்களின் உருவங்களையும் கச்சிதமாக, கலைநயத்துடன் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்று அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.  மிகப்பெரிய அளவிலான சுகாதார பிரச்னையை மாணவர்கள் அவர்களின் கலைத்திறன் வாயிலாக சரிசெய்துள்ள இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close