தற்போதைய ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை: பாலகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:58 am
in-the-present-regime-the-students-are-not-safe-balakrishnan

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்போடு 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வைத்துவிட்டு, 3 தொகுதிகளுக்கு தள்ளிவைத்துள்ளது தேர்தல் ஆணையம்  உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்பதை காட்டுவதாகவும், அமைதியான, நேர்மையான தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார். 

மதுரை சித்திரை திருவிழா காரணமாக தமிழகம் முழுவதிலும் வாக்குபதிவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதால் அதற்கான மாற்று ஏற்பாட்டை  செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தும் தாமதமாக கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை அதிகாரி வெளியிட காரணம் என்ன? புகார் அளிக்கும் பெண்களை மிரட்டும் நோக்கில் காவல் துறை செயல்படுகிறதா? என பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பி உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close