விவசாயம் தான் நாட்டை பலப்படுத்தும் என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 09:18 am
bjp-did-wholesale-attack-on-our-institution-rahul-gandhi

விவசாயமும், விவசாயிகளும் இல்லாமல் இந்த நாடு பலமாக இருக்காது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றும் அது தான் எங்களுக்கும் பா.ஜ.கவுக்கு உள்ள வித்தியாசம் என்றும் சென்னையில் பேட்டியளித்த ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கிண்டியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "தற்போது சில முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன. முதலில் வேலைவாய்ப்பு இல்லை. மேக் இன் இந்தியா போன்ற போலி வாக்குறுதிகளை மோடி தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளை நான் ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது பார்த்தேன். நான் எதையும் மறக்கவில்லை. அவர்களை அங்கு எப்படி நடத்தினார்கள் என்று எனக்கு தெரியும். 

சிபிஐ, உச்சநீதிமன்றம் என நாட்டின் முக்கிய துறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடும், தமிழும் தாக்குதலை சந்திப்பது போல தான் மற்ற மாநிலங்களும் உணர்கின்றன. இந்த நாட்டை நாக்பூரில் இருந்து ஆட்சி செய்ய முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்குரல் இருக்கிறது. 

தமிழகத்தில் அரசு இருக்கிறது தான், ஆனால் அதனை மத்திய அரசு தான் கட்டுப்படுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது தமிழ் மக்களை இழிவுப்படுத்துவது போலாகும். இதுபோன்று தமிழகத்தில் நடந்ததே இல்லை. டெல்லியில் இருப்பவர்கள் தமிழகத்தை கட்டுப்படுத்துகிறார். இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ் மக்கள் தான் தமிழகத்தை வழி நடத்த வேண்டும். 

மோடி ஏன் மக்களை சந்திக்க தயங்குகிறார். என்னுடன் உரையாட வேண்டாம். செய்தியாளர்களை சந்திக்கட்டும். மாணவர்களை சந்திக்கட்டும். ஏன் மறைந்துக்கொள்கிறார். 

பொருளாதாரம் சரியான பாதையில் செல்ல வேண்டும். அதற்காக தான் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்துவோம். இது தமிழகத்துக்கு மிகபெரிய முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில்முனைவதில் தமிழகம் முன்னொடியாக இருக்கிறது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு உருவாக்குவதில் தமிழகத்தை நாட்டின் தலைநகராக்குவோம். 

இந்தியாவை  ஆர்.எஸ்.எஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் எண்ணம்.  பல மொழிகளும், பல கலாச்சாரங்களும் கலந்ததுதான் இந்தியா என்று நாங்கள் நம்புகிறோம். எனவே நாங்கள் அனைவரையும் ஒரே நிலையில் பார்க்க நினைக்கிறோம். 

அவர்கள் ஆளும் மாநிலங்களையும், மற்ற மாநிலங்களையும் பாஜக வேறுப்படுத்தி பார்க்கிறது. அது தான் தேசியத்திற்கு எதிரானது. காங்கிரஸ் நிச்சயம் அப்படி இருக்காது. நாங்கள் ஆட்சி அமைத்ததும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். அதனை நாங்கள் முன்பே செய்துக்காட்டி உள்ளோம். 

விவசாயமும், விவசாயிகளும் இல்லாமல் இந்த நாடு பலமாக இருக்காது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அது தான் எங்களுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வித்தியாசம். எங்களால் எந்தெந்த வகையில் விவசாயிகளுக்கு உதவ முடியுமோ அதை செய்வோம்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close