ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கோபம் இல்லை: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 04:51 pm
don-t-have-hatred-towards-anybody-rahul-gandhi-on-father-rajiv-gandhi-s-case-convicts

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இன்று ஒருநாள் பயணமாக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து மேலும் பேசும் போது அந்த 7 பேர் மீது தனிப்பட்ட கோபம் இல்லை. எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சினையா? ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்டப் பிரச்னை தொடர்பானது. நீதிமன்றம்தான், ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கூறினார். 

மேலும், இலங்கை படுகொலை விஷயத்திற்காக காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை. தமிழக மக்கள் மீது காங்கிரஸ் மிகுந்த அன்பு கொண்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்காக தனித்துறை அமைக்கப்படும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close