பொள்ளாச்சி கொடூர வழக்கு: திமுக கூட்டணி தீர்மானம்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 01:12 pm
m-k-stalin-about-pollachi-case

பொள்ளாச்சி கொடூர வழக்கு குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இன்று திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு அறிவிப்புக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். 

மேலும் இந்த விவகாரம் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும், இதனை திசைத்திருப்ப தான் தனது மருமகன் சபரீசன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதும் குற்றம்சாட்டி உள்ளனர் என்றும் அதற்கு சட்டரீதியாக நோட்டிஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close