தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் உயர்வு!

  அனிதா   | Last Modified : 05 Jun, 2019 03:30 pm
neet-exam-result-released

தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுகள் கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதிய 1.40 லட்சம் மாணவர்களில் 59,755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 31.56 ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது.

தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி அகில இந்திய அளவில் 57வது இடம் பிடித்துள்ளார்.  நாடு முழுவதுமான ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 56.5% ஆகும். ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர் அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close