8 வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும்: முதலமைச்சர்

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 10:46 am
8-way-road-project-will-be-implemented-chief-minister

சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க  ரூ. 320 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மேம்பாலம் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சேலம் மாநரத்தின் மையப்பகுதியில் 7.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நவீன முறையில் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 

ஏவி.ஆர் ரவுண்டானா - அஸ்தம்படி வரை 2.5 கி.மீ.,க்கு பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மக்களின் வசதிக்காகவே 8 வழி சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், தனி நபருக்காக அல்ல எனவும் கூறினார். மேலும், நில உரிமையாளர்களை சமாதானப்படுத்தி, 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close