மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 04:42 pm
the-trying-to-burn-with-family-before-district-collector-office

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மண்ணெண்ணெய் ஊற்றி  தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் ,பிரணவ், ராஜமால்யா என்ற 2 மகன்களும் உள்ளனர். தேவராஜனுக்கும் அவரது வீட்டின் அருகே உள்ள ராஜசேகருக்கும் இடையே வழித்தடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து வழித்தடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தி அடைந்த தேவராஜன் இன்று குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். 

இதனை கண்ட காவல்துறையினர் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். இதை தொடர்ந்து அவர்களை சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close