வரதராஜப் பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் அத்தி வரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சற்றுமுன் காஞ்சிபுரம் வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா வரவேற்றார்.
இன்று பிற்பகல் 12 மணியளவில் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை வந்த குடியரசுத்தலைவர், அங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார். குடும்பத்தினருடன் வந்துள்ள அவர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அத்தி வரதரை தரிசித்து விட்டு, மாலை 4 மணிக்கு மேலாக சென்னை திரும்புகிறார்.
இன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு நாளை 13ம் தேதி மாலை தனி விமானம் மூலமாக டெல்லி புறப்படுகிறார். இதற்கிடையே சென்னையில் ஒரு சில நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
newstm.in