நீட் விலக்கு மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பி அனுப்பப்பட்டன: மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 05:03 pm
home-ministry-replied-on-neet-exam-relaxation-for-tn

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய உள்துறை இணை செயலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க 2017 பிப்ரவரி 20ம் தேதி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. அப்போது, தமிழக சட்டப்பேரவை மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழக பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒப்புதல் பெறவேண்டும் என்றால் தான் குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நாடு முழுவதும் பொதுவான ஒரு சட்டத்தில் விலக்கு அளிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் எஸ் வைத்யா  சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2017 செப்டம்பர் 22ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். 

பின்னர் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close