வீராணம் ஏரி பாசன கால்வாய்களை தூர் வார வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

  அனிதா   | Last Modified : 13 Oct, 2019 06:06 pm
need-to-be-cleaned-of-veeranam-lake-irrigation-canals

வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவாசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை வழங்காமல் வங்கிகள் இழுத்தடிப்பதாகவும், காப்பீடு தொகையை வழங்ககாததால் 20 சதவீதம் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார். 

தமிழகத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிமுகவிற்கு எதிரான அலை வீசுவதாக தெரிவித்த திருமாவளவன், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளதாக கூறினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close