நகர் முழுக்கவே இலவச வைஃபை! முதல்வரின் அதிரடி சலுகை!

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 03:28 pm
free-wifi-in-delhi

தமிழகம்  முழுக்கவே தேர்தல் ஜுரம் பரவி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி நாளுக்கு நாள் புது அறிவிப்பை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு சலுகையாக அறிவித்து அதிரடி நடத்தி வருகிறார். இந்நிலையில், டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில், டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், டெல்லி முழுவதும் இலவசமாக இணையதள சேவை  வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இணையதள சேவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக டெல்லி முழுவதும் 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும். பேருந்து நிலையங்களில் 4000 ஹாட்ஸ்பாட்டுகளும், சந்தை பகுதிகளில் 7000 ஹாட்ஸ்பாட்களும் அமைக்கப்படவுள்ளது. வரும் 16-ம் தேதி முதல்கட்டமாக 100 ஹாட்ஸ்பாட்டுகள் தொடங்கி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்த ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே நேரத்தில் 150 முதல் 200 பயனாளர்கள் பயன்பெறமுடியும் என்றும் தினசரி டேட்டாவின் வேகம் 50 MP முதல் 100 MP வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close