இன்று 2வது டி20 போட்டி - சாதனை படைப்பாரா கோலி?

  முத்து   | Last Modified : 08 Dec, 2019 09:27 am
india-west-indies-t20-match

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 94 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள். முதல் போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியிலும் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் ரோகித் சர்மா (2,547 ரன்), 2ஆவது இடத்தில் விராட் கோலி (2,544 ரன்) உள்ளனர். ரோகித் சர்மாவை கோலி முந்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 4 போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை முடிந்துள்ளதால் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது. இரு அணி வீரர்களும் வெற்றி பெற முனைப்பு காட்டுவர் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close