சண்டை காட்சிகளில் அசத்தும் த்ரிஷா! - ராங்கி டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு

  முத்து   | Last Modified : 09 Dec, 2019 07:39 am
trisha-starrer-raangi-teaser

காதல் கதையில் உருகிய '96' திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவின் ராங்கி என்ற திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ராங்கி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா இசையமைக்கிறார். கடந்த மே மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில், த்ரிஷா துப்பாக்கிகளுடன் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.  டீசரின் இறுதியில் ராங்கி திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close