வாய்ப்பு கொடுத்த இந்தியா.. புரட்டி எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

  முத்து   | Last Modified : 09 Dec, 2019 09:53 am
2nd-t20-cricket-west-indies-won-against-india

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சிவம் துபே அரைசதம் அடித்து அசத்தினார். 

அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய சிம்மோன்ஸ் 67(45) ரன்களும், நிகோலஸ் பூரன் 38(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் கொடுத்த கேட்சை விட்டதால் தான் இந்த தோல்வி என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்,

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close