ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி! அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை!

  அனிதா   | Last Modified : 15 Dec, 2019 05:06 pm
queen-web-series

இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக குயின் என்கிற பெயரில் இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குயில் ட்ரைலரில், ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி ஷேஷாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.எம்.ஆர் கதாபாத்திரம் எம்.ஜி.ஆர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கேரக்டர் ரம்யா கிருஷ்ணனிடம் ராணி என்று கூறும் காட்சியும், முத்தக் காட்சியும் இடம் பெற்றுள்ளது.  இந்நிலையில், நேற்று முதல் வெளியான இந்த வெப் சீரிஸில் முத்தக்காட்சியும் இடம் பெற்றிருப்பது அதிமுகவினரிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

தமிழகத்தில் இம்மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த வெப் சீரிஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close