வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்து பாருங்க!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 08:21 pm
try-it-on-friday

வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி  தூபம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நம் வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.  தனித்த சாம்பிராணி என்று இல்லாமல் நம் தேவைகளுக்கேற்ப சாம்பிராணியுடன் சில பொருட்களைச் சேர்த்து தூபம் இட வீட்டில் மங்கலங்கள் நிறையும் என்பது உறுதி. அந்த வகையில் சாம்பிராணியுடன் எந்தெந்த பொருட்களை சேர்க்க என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று காணலாம்.

1.சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
2.சாம்பிராணியில் அகில் சேர்த்து தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
3.சாம்பிராணியில் தூதுவளையை சேர்த்து  தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.
4.சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
5.சாம்பிராணியில் அருகம்புல் பொடியை சேர்த்து  தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்..
6.சாம்பிராணியில் வெட்டிவேரை சேர்த்து  தூபமிட காரியசித்தி உண்டாகும்.
7.சாம்பிராணியில் வேப்பிலையை சேர்த்து  தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
8.சாம்பிராணியில் வெண்கடுகை சேர்த்து தூபமிட பகைமை விலகும்.


9.சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை சேர்த்து  தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
10சாம்பிராணியில் ஜவ்வாது சேர்த்து தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
11சாம்பிராணியில் வேப்பம்பட்டையை சேர்த்து  தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
12சாம்பிராணியில் நாய் கடுகை சேர்த்து தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
13.சாம்பிராணியில் காய்ந்த துளசியை சேர்த்து  தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
14.சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து  தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
15சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை சேர்த்து  தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.
16.சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை சேர்த்து  தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close