ஜூன் 1 முதல் பாஸ்போர்ட் போலவே ரேஷன் கார்டு! மத்திய அரசின் புது திட்டம்!!

  சாரா   | Last Modified : 21 Jan, 2020 02:00 pm
one-nation-one-ration-card

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.  இதற்காக ஒரு நிலையான வடிவத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. 

 இந்த திட்டம், சோதனை ரீதியில் முதலில் 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. அதையடுத்து நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் 1-ந் தேதி நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயனாளிகள் ஒரே ரேஷன் கார்டை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களைப் பெற முடியும்.

பல்வேறு மாநிலங்களும் பயன்படுத்தி வருகிற ரேஷன் கார்டுகளின் வடிவங்களை கருத்தில் கொண்டும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனையைப் பெற்றும் இந்த நிலையான ரேஷன் கார்டு வடிவம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,  புதிய ரேஷன்கார்டுகளை எப்போது வழங்கினாலும், இந்த புதிய வடிவத்தை பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த ரேஷன் கார்டுகளில், கார்டுதாரர் பற்றிய குறைந்தபட்ச தகவல்கள் மட்டுமே இடம்பெறும் என்றும்  மாநிலங்கள், தங்கள் தேவைக்கேற்ப கூடுதல் விவரங்களை சேர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது 2 மொழிகளை கொண்டிருக்கும் என்றும், ஒன்று, உள்ளூர் மொழி மற்றொன்று ஆங்கிலம் அல்லது இந்தியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

 

புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும் என்றும் முதல் 2 எண்கள் மாநிலத்தை அடையாளப்படுத்துகிற வகையில் அமைந்திருக்கும், அடுத்த 2 எண்கள் ரேஷன் கார்டின் வரிசை எண்களாக அமையும், மீதியுள்ள எண்கள், குடும்பத்தின் உறுப்பினர்களுக்கான அடையாளத்தை (ஐ.டி.) தரும் வகையில் இலக்கங்கள் அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பாஸ்போர்ட் வழங்கப்படுவது போலவே இந்த ரேஷன் கார்டை நாடு முழுவதும் ஒரே அடையாள அட்டையாக பயன்படுத்தும் விதமாகவும் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close