போதையில் கொலை.. குளியலறையில் வழுக்கி விழுந்ததாக நாடகம்.. சிக்கிய கணவன்..

  முத்து   | Last Modified : 23 Dec, 2019 10:33 am
killing-his-wife-slipped-and-died

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பரேலில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் அஜய்(வயது43) - சவிதா(43) தம்பதி வசித்து வந்தனர். இந்தநிலையில், சவிதா குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி, அவரை அஜய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சவிதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து போய்வாடா காவல்துறைக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்று சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அஜயிடம் விசாரணை நடத்தியப்போது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மனைவி சவிதாவை தானே கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று வீட்டில் அஜயும் அவரது மனைவியும் மது குடித்துள்ளனர். அப்போது, அஜய் சவிதாவை தன்னுடன் சாப்பிடும் படி கூறியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சவிதா சாப்பிட மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த அஜய் குடிபோதையில் மனைவியின் தலையை பிடித்து சுவரில் மோதி உள்ளார். இதில் படுகாயமடைந்த சவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக அஜய் வீட்டில் இருந்த தடயத்தை அழித்துவிட்டு, சவிதாவின் உடலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று குளியல் அறையில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அஜயை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் .  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close