மூக்கு பெரிதாக உள்ளதால் மாப்பிளையை பிடிக்க வில்லை.. ஏற்பாடுகளுக்கு பின் மணப்பெண் ஓட்டம்

  முத்து   | Last Modified : 06 Jan, 2020 10:48 am
bengaluru-woman-techie-stops-marriage-over-grooms-long-nose

பெங்களூரு கோரமங்களாவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியராக அமெரிக்காவில் வேலை செய்து வரும் ராஷ்மி என்ற பெண்ணுக்கும் இணையதளம் மூலம் திருமணம் செய்ய குடும்பத்தினர் வரன் பார்த்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இம்மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து திருப்பதியில் திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு, அங்கு வரும் உறவினர்கள் தங்குவதற்காக 70 அறைகள் முன்பதிவு செய்வதற்கென ரூ 1 லட்சம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு, சமையல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆடைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் என 4 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.

இதனிடையே திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ராஷ்மி, “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்தை நிறுத்தி விடுங்கள்” எனக் கூறியுள்ளார்.  இதைக்கேட்டு மாப்பிள்ளை  வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம்  என்னவென்று கேட்க “உங்களுடைய மூக்கு பெரிதாக உள்ளது எனக்கு பிடிக்கவில்லை என மாப்பிளையிடம் மணப்பெண் கூறினார்.

அப்போது மணமகன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது மூக்கின் தோற்றத்தை மாற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த ராஷ்மி திருமணத்தை நிறுத்தினார். இது குறித்து மாப்பிளை வீட்டார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி ராஷ்மி, லட்சுமி மற்றும் அவர்களுடைய தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close