ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 04:18 pm
gold-rate-high-in-3-days

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலங்காலமாகவே தமிழர்களிடையே இருந்து வருகிற நம்பிக்கை. மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் திருமணங்களை பெரும்பாலும் யாரும் செய்துக் கொள்வதில்லை. தை பிறந்ததும் பொதுவாகவே முகூர்த்த நாட்களில் மண்டபங்கள் கிடைக்காமல், தமிழகம் முழுவதும் கோயில்களிலும் கூட நிறைய திருமணங்கள் நடைபெறும். கல்யாணத்திற்காக நகைகளை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள், தங்கத்தின் தொடர்ச்சியான விலையேற்றத்தில் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.64 உயர்ந்து ரூ.3,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close