கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 06:16 am
a-man-accused-of-sexually-abusing-a-minor-has-been-arrested-under-the-pocso-act

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த ஐபிகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்  குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 36 வயதான சுப்பிரமணி தான் வசிக்கும் பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த 13 வயது சிறுமியை அடிக்கடி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் சிறுமியின் சிறுமியின் கைகளை கட்டிப்போட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் எனக் கத்தியைக் காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அச்சம் அடைந்த சிறுமி தனக்கு நேரும் கொடுமையை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். எனினும் இது குறித்து தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம்  கூறவே இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது. மகளுக்கு நேர்ந்த கொடுமையால் அதிர்ச்சியில் கலங்கியிருந்த சிறுமியின் பெற்றோர் சுப்பிரமணி மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை  சிறையில் அடைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close