என் மனைவியுடன் அடிக்கடி தனிமையில் பேசுகிறார்.. புகாரளித்த கணவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்... 

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 06:22 am
husband-complaint-against-sub-inspector-of-rayala-police-station

சென்னை வளசரவாக்கம் அருகே தனது மனைவியுடன் சப்-இன்ஸ்பெக்டர் அடிக்கடி பேசி வருவதாகவும் தட்டி கேட்டதற்கு தன்னை தாக்கியதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார்.
வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜேஷ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்களுடன் முறையிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் என்னை தாக்கினார் என்றும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு இருக்கும் வகையில் சந்தேகித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இதனிடையே, தன் மீது ஜனார்த்தனன் பொய் புகார் அளித்துள்ளதாக ராஜேஷ் தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர், இருவரிடமும் விசாரணை செய்து வருகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close