கோவிலுக்குள்ளேயே தில்லாக கள்ள நோட்டு அச்சடித்த பூசாரி! அதிர்ந்த போலீசார்!!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 02:05 pm
fake-notes-seized-by-surat-crime-branch

குஜராத் மாநிலம் சூரத் காவல்துறையினர் ரோந்து பணியின்போது சந்தேகப்படும்படி நின்ற 19 வயது இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் பெயர் சோட்வைத்யா என்பதும் அவரிடம் 203 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததும் தெரியவந்தது. காவல்நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டு என்பதை காவல் துறையினர் கண்டு பிடித்தனர். பின்னர் காவல் துறையினர் மிரட்டலுக்கு பயந்த இளைஞர் கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பல் பற்றிய முழு விபரங்களையும் கூறிவிட்டார். 

அதைத் தொடர்ந்து கேடா மாவட்டத்தில் அம்பாவ் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் கோவிலுக்குள் புகுந்த காவல் துறையினர் பூசாரி ராதாராமன் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவரை விசாரித்ததில் புதிதாக கட்டப்பட்டு வரும் அந்தக் கோவிலின் ஒரு பகுதியிலேயே கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதைத் தெரிய வந்ததும் போலீசார் அதிர்ந்தனர். தினமும் பல பக்தர்கள் வந்துச் செல்லும் கோவிலுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரங்களை வைத்து தைரியமாக கள்ள நோட்டுக்களை அச்சடித்து வந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  பின்னர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்த பட்ட இயந்திரமும் மற்ற உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் 46 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். இக்கும்பலுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா?, எப்படி கள்ளநோட்டை புழக்கத்தில் விடுகின்றனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close