ஆபாச வீடியோ காட்டி பலாத்காரம்! சிக்கிய அதிமுக பிரமுகர்!!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 11:11 am
68-years-old-man-arrested-for-child-abuse-in-chennai

சென்னையில் 13 வயது சிறுமியிடம் ஆபாச வீடியோக்களைக்  காட்டி பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி (68). அதிமுக  பிரமுகரான இவர், தனது தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் 13 வயது சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று செல்போனில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் 1098 ஹெல்ப் லைன்னை தொடர்புக் கொண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல் துறையினர் ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு ஆபாச படத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே அவரை விடுவிக்கக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close